• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தூக்கம் வரவில்லையா? இதையெல்லாம் செய்து பாருங்கள்!

Jan 17, 2023

ஒரு மனிதனுக்கு குறைந்தது 7 மணி நேர தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறிவரும் நிலையில் பலர் தூக்கம் இன்றி தவித்து வரும் வருவதால் அவர்களுக்கு வாழ்க்கையில் வேதனை தான் மிஞ்சும்

அந்த வகையில் நன்றாக தூங்குவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு காபி தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். 

டிவி பார்ப்பது கேம்ஸ் விளையாடுவது ஆகியவற்றையும் படுக்கும் முன் தவிர்க்க வேண்டும். நன்றாக தூக்கம் வருவதற்கு சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம்.

படுக்கையில் படுத்து கொண்டு டிவி பார்ப்பதும் புத்தகம் படிப்பதும் படிப்பதுமாக இருந்தால் தூக்கம் வராது. எனவே தூக்கம் வரும் போது படுக்கையில் படுக்க வேண்டும்.

படுக்கை அறையில் முடிந்தவரை வெளிச்சத்தை தவிர்க்க வேண்டும். குறைவான வெளிச்சம் இருந்தால் நல்லது 

படுக்கையறையை சுற்றி நல்ல சுத்தமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டால் தூக்கம் கண்டிப்பாக வரும். மனதை அலைபாய விடாமல் நிம்மதியான தூக்கம் ஏற்பட மேற்கண்ட வழிகளை கடைபிடித்து பாருங்கள்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed