தேங்காய் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

பெரிய தேங்காய் ஒன்றின் விலை 100 முதல் 120 ரூபாய் வரையிலும், சிறிய தேங்காய் 85 முதல் 90 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது.

தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தேங்காய் வாங்க முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் கையிருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை மோசமாகி உள்ளதாக தேங்காய் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.