றொரன்டோவில் சீரற்ற காலநிலை காரணமாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

றொரன்டோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு பஸ் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பனி மழை காரணமாக இவ்வாறு சேவைகளை ரத்து செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலையினால் சில பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை, பாடசாலைகள் எதுவும் மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹால்டன் மாவட்ட பாடசாலை சபை, ஹால்டன் கத்தோலிக்க பாடசாலை சபை, பீல் மாவட்ட பாடசாலை சபை, டப்ரீன் பீல் கத்தோலிக்க பாடசாலை சபை, டர்ஹம் மாவட்ட பாடசாலை சபை, டர்ஹம் கத்தோலிக்க பாடசாலை சபை உள்ளிட்ட சில பகுதிகளுக்கான பாடசாலை பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Von Admin