இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண சாரதிகள் மற்றும் நடத்துனர்களை நியமிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.