ஐரோப்பாவின் ஜெர்சி தீவில் வரலாறு காணாத பெருமழை காரணமாக அங்குள்ள அரசாங்கத்தால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய நீர்நிலையான Grands Vaux நிரம்பியுள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் பாதுகாப்பு கருதி டசின் கணக்கான மக்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

39 குடியிருப்புகளில் மக்கள் முதற்கட்டமாக பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிகமாக மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றே நகர நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. மட்டுமின்றி, பெரும்பாலான சாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெர்சி தீவில் மேலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் 2மி.மீ அளவுக்கு அல்லது அதற்கும் மேலும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

இதனிடையே, அவசர தேவைக்கு என தொலைபேசி இலக்கம் ஒன்றை நிறுவியுள்ளதாகவும், பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.