• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்தவர் தேங்காய் விழுந்து உயிரிழப்பு

Jan 18, 2023

யாழ்.அராலி மத்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தென்னை மரத்தின் கீழே படுத்திருந்தவர் மீது தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,சாரதியாக பணிபுரியும் குறித்த நபர் கடந்த 16ம் திகதி வாகனத்தை நிறுத்திவிட்டு தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

இதன்போது அவரது நெஞ்சுப் பகுதி மீது தேங்காய் விழுந்தது.அதனையடுத்து அவர் நேற்றையதினம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தவேளை இடையில் உயிரிழந்துள்ளார்.

அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பிரதேச பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed