யாழ் அலைப்பிட்டியில் தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

தயார் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உறங்க வைத்து விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் குழந்தை சத்தமில்லாமல் உறங்கி கொண்டிருந்ததால் குழந்தையை சென்று பார்த்த வேளை குழந்தை சற்றும் அசைவில்லாமல் இருந்துள்ளது.

உடனடியாக குழந்தையை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குழந்தை ஏற்க்கனவே இறந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.