வாட்டர்லூ அரசியல்வாதிகள், மண்டல தலைவர் நகர மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் காவல்துறை தலைவர் மற்றும் ஊழியர்கள் பொங்கல் விருந்தில் வாழை இலையில் சாப்பிடும் காணொளி ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது.

தமிழ் கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழாவில் பல அதிகாரிகள் வாழை இலையில்  ரசித்து  விருந்து சாப்பிடுவதைக் காணலாம்.

தைப் பொங்கல் விழாவானது , உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் முக்கியமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் வாட்டர்லூ அரசியல்வாதிகள், மண்டல தலைவர் நகர மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் காவல்துறை தலைவர் மற்றும் ஊழியர்கள் பொங்கல் விருந்தில் பங்கேற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை லண்டனில் பொங்கல் பண்டிகையையொட்டி அவரது ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மதிய உணவு விருந்தில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது .

எனினும், அந்த வீடியோ இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து இல்லை என்றும் கனடாவில் உள்ள வாட்டர்லூவிலேயே இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

Von Admin