உக்ரைன் தலைநகர் கீவ் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீவ் நகரில் உள்துறை அமைச்சர் டென்னிஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியதில் தீப்பற்றி எரிந்தது.

தொடக்கப் பள்ளியின் மீது ஹெலிகாப்டர் விழுந்ததில் பள்ளி மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் உள்துறை அமைச்சர் டென்னிஸ், இரண்டு மாணவர்கள் உள்பட 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் கீழே விழுந்ததில் தீப்பற்றி எரிந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து உக்ரைன் அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.