இந்தியாவின் தமிழகத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவன் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் 20.01.2023 அன்று பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்த 42 அகவையுடைய றமணன் என்ற இளைஞன் வீட்டில் இருந்த வேளை திடீரென மயங்கி வீழ்ந்துள்ளான்.

அவச நோயாளர் காவு வண்டிமூலம் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தினை சேர்ந்த குறித்த இளைஞன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டிற்கு செல்வதற்காக சென்று இந்தியாவின் தமிழகத்தில் தங்கியிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்ற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.