உறைபனி  மற்றும் மூடுபனி ஆகியவற்றின் அபாயகரமான நிலை காரணமாக, விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை தொடர்ந்து பயணிகள் இன்று காலை நெருக்கடிக்கு ஆளாகினர்.

பனி படர்ந்த சாலைகள் காலை நெரிசல் நேரத்தில் பல விபத்துக்களை ஏற்படுத்தலாம் என்ற பயண எச்சரிக்கைகளை தொடர்ந்து இந்த நிலைமைய ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக  80 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் இன்று காலை ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து ரத்து செய்யப்பட்டன.

லண்டனில் இன்று காலை 8 மணிக்குள் வெப்பநிலை -6C ஆகக் குறைந்தது.

திங்கட்கிழமை காலை குறைவான வெப்பநிலையுடன் தொழிலாளர்கள் போராடியதால், வானிலை அலுவலகம் இரவு 11 மணி வரை மஞ்சள் மூடுபனி எச்சரிக்கையை வெளியிட்டது.

குறைந்த தெளிவுநிலையானது அபாயகரமான சாலை நிலைமைகளை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர், உறைபனி மூடுபனி மிகவும் தடிமனாக மாறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் மட்டும் 80 க்கும் மேற்பட்டவை இரத்து செய்யப்பட்டன.

அனைத்து விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திலும் தென்கிழக்கு பகுதியிலும் இன்று காலை பார்க்கும் திறன் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ஹீத்ரோ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Von Admin