கம்பளை நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில்  ஏ.டி.எம் இயந்திரத்தை நான்கு சந்தேக நபர்கள் முற்றாக அகற்றிச்சென்றுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

தங்கள் அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்த நான்கு நபர்கள் ஒரு சிற்றூர்தியில் வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை அகற்றிச்சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு முன்னதாக, குறித்த சந்தேகநபர்கள் வங்கியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிவைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பணத்தொகை தொடர்பான தகவல்கள் தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.