பிரித்தானியாவில் மருத்துவ அவசர ஊர்தி (அம்புலன்ஸ்) ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 30 மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்ய வெண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ அவசர ஊர்தி (அம்புலன்ஸ்) பராமரிப்பு உதவியாளரான ஷான் ஆக்ஸ்பி, மன உறுதி மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வுக் கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் போராட்டம்

அதன்படி வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊதியக் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை என்றும், ஊதிய உயர்வை ஊதிய மறு ஆய்வு அமைப்புகளே முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Von Admin