பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் ஆந்திர பகுதியில் இசம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆந்திரா தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (28). இவர் கந்துக்கூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு கடையை மூடி விட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது பஸ் நிலையம் பின்புறம் பாம்பாட்டி ஒருவரை பார்த்த மணிகண்டா, அவரிடம் இருந்த பாம்பை தனது கழுத்தின் மீது போடும்படி கெஞ்சினார். ஆனால், பாம்பாட்டி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பணம் தருவதாக கூறி அவரை வற்புறுத்தினார்.

‘ஒரே ஒரு செல்ஃபி மட்டும் எடுத்துக் கொள்கிறேன் தயவுசெய்து பாம்பை எனது கழுத்தின் மீது ஒரு நிமிடம் மட்டும்விடு’ கேட்க .பாம்பாட்டியும் பணத்துக்கு ஆசைப்பட்டு ஒப்புக்கொண்டார்.

பாம்பை கழுத்தின் மீது வைத்ததும் செல்ஃபி எடுத்துக்கொண்டார் மணிகண்டா. அதன் பின்னர் பாம்பை தோளிலிருந்து திரும்ப எடுக்க முற்பட்டபோது அது மணிகண்டாவை எதிர்பாராத விதமாக தீண்டிவிட்டது.

இதையடுத்து அலறித்துடித்த அவரை ஓங்கோல் அரசு மருத்து வமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறப்படுகின்றது .