• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு !

Jan 26, 2023

நாட்டின் டெங்கு நோயாளர்களின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவ உதவியை நாடுமாறு பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, கொழும்பில் 640 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 625 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கம்பஹாவில் 412 பேரும், கல்முனையில் 369 பேரும், யாழ்ப்பாணத்தில் 343 பேரும் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed