பாடசாலை படிக்கும் போது அடிக்கடி பின்னாடி இருக்கிற பெஞ்சுல இடுச்சுக்குவோம். அப்படியே வலி ஜிவ்வுனு இருக்கும். ‘நமக்கு மட்டும் தான் இந்த அனுபவமா என்று நினைக்கும் போது வகுப்பில் இருக்கிற பாதி பேருக்கு இது பழக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் வளர்ந்த பின்னரும் கூட ‘இது எதனால் ஏற்படுது’என்று நாம் சிந்திக்க மாட்டோம்.. நம்மில் பலருக்கு ஏற்பட்ட அந்த ஷாக் உணர்வு ஏன் ஏற்படுகிறது?

ulnar nerve எனும் நரம்பு கழுத்தில் தொடங்கி முன் கை,மணிக்கட்டுக்குள் நுழைந்து மோதிர விரலில் முடிவடையும் நீண்ட நரம்பு. இங்குள்ள எலும்பின் பெயர் Funny Bone. இந்த ulnar nerve உடன் இணைந்த எலும்பு ஹியூமரஸ். இது நமது முழங்கைக்கு மேலே உள்ளதாம். ஹியூமரஸ் எலும்புக்கும் முன்னம் கைக்கும் இடையில் ஒரு வெற்றிடம் இருக்கும்.. இது கியூபிடல் சுரங்கம் என்று மருத்துவ பாஷையில் அழைக்கப்படுகிறது. இந்த கியூபிடலில் தான் வம்பு உள்ளது. அதாவது எளிதில் பாதிப்படைய கூடியது.

நாம் எங்காவது இடித்துக்கொள்ளும் போது இந்த பாதுகாப்பற்ற நரம்பானது எலும்போடு சேர்த்து அழுத்தப்படுகிறது. அந்த நேரம் ulnar nerve ஆனது பாதுகாக்கும் பொருட்டு அலைகளை தூண்டி மின்சார அதிர்ச்சியை தருகிறது. அதனாலே இடித்துக்கொள்ளும் போது “நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்” என்றபடி நிற்கிறோம்.