பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவியது.

இந்த நிலையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1-ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர், அதன் மையம் இஸ்லாமாபாத்தில் இருந்து மேற்கே 37 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.