இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றில் விபத்திற்குள்ளாகவிருந்த நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகவிருந்தது.

குறித்த பேருந்து இன்று (30) பெரகல வியாரகல வீதியில் பயணிக்கையில் பேருந்து வேகதடுத்து இயங்காமல் போயுள்ளது.

இந்த நிலையில் சாரதி உடனடியாக வீதி​யோரம் இருந்த வடிகானிற்குள் பேருந்து சரித்து நிறுத்தியுள்ளார்.

இதனால் பெரும் விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.