சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

தேங்காய் உற்பத்தி குறைந்ததன் காரணமாக தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும் எவ்வாறாயினும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் சந்தைக்கு சுமார் 600 மில்லியன் தேங்காய் கிடைக்கும் எனவும் இதனால் தேங்காய் விலை குறையும் எனவும் தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.