• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யானையிடமிருந்து தனது குழந்தையைக் காப்பாற்றி உயிர் துறந்த தாய்!!

Jan 31, 2023

மஹியங்கனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதுடைய இளம் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த தாய் தனது பிள்ளை மற்றும் கணவருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் வந்த காட்டு யானையொன்று வீட்டின் சில பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதன்போது உறங்கிக்கொண்டிருந்த குழந்தையுடன் அயலவர் வீட்டிற்கு கணவன், மனைவி தப்பித்து செல்லும் வழியில் காட்டு யானை இடைமறித்து தாக்கியுள்ளது.
தாய் பிள்ளையின் உயிரை காப்பாற்ற பல மணி நேரம் போராடியுள்ளதுடன், யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அயலவர்கள் தீயினை மூட்டி கடும் போராட்டத்தின் பின்னர் யானையினை விரட்டி காயமடைந்த குழந்தை மற்றும் தாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது வைத்தியசாலையில் தாய் மற்றும் குழந்தை சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed