யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அரச பேருந்தும், தனியார் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று பிற்பகல் 4.15 மணியளவில் நுணாவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது

யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது எதிர்த் திசையில் வந்த மினி பஸ்சுடன் மோதி உள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்ட போதிலும் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.