யாழ் பருத்தித்துறை திக்கம் பகுதியில் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கத்தி முனையில்  5 இலட்சம் பணம் மற்றும் 20 பவுண் நகைகள் போன்றனவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

நேற்று அதிகாலை வீட்டின் கதவினை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற நிலையில் குறித்த கொள்ளைச் சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு வழங்கியதை அடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .