• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட தந்தையும் மகனும்

Feb 2, 2023

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தந்தையினது மகனதும் இறுதிக்கிரிகைகள் ஒன்றாக நடப்பெற்றமை பார்ப்பவர்கள் நெஞ்சங்களை கனக்கசெய்துள்ளது.

விபத்தில் செல்வராஜா தனபாலசிங்கம், தனபாலசிங்கம் றஜிதன் ஆகியோரே உயிரிழந்த நிலையில் அதே குடும்பதை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்த இருவரின் இறுதிக்கிரியை நேற்றையதினம் இடம்பெற்ற நிலையில் உடல்களும் தகனம் செய்யப்பட்டன. கடந்த 21ஆம் திகதி இரவு மெர்சிடிஸ் ரக கார் ஒன்று, பேடன் மேற்கு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குடிபோதை அல்லது போதைப் பொருளினால் ஏற்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடையாது என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

St.Gallen கான்டனில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த 18 வயதான மகன் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட யாழ் தந்தையும் மகனும்; கண்ணீரில் நனைந்த உறவுகள்(Photos) | A Jaffa Father And Son Were Buried Amid The Tears

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed