• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பலரையும் வியக்க வைக்கும் 81 வயது மருத்துவர்!

Feb 2, 2023

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மருத்துவர் அருளானந்தம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனது அயராதசேவை மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மருத்துவர் அருளானந்தம் ஆவார்.

அவருக்கு இப்போது 81 வயதாகிறது. இந்த வயதிலும் தினமும் காலை 7 மணிதொடக்கம் பகல் 2 மணிவரை தனது வைத்திய நிலையத்தைத் திறந்து, சேவை புரிந்து வருகிறார்.

இவரின் சிறப்பம்சம் என்னவென்றால், மிகவும் குறைந்த கட்டணத்தோடு மருத்துவம் பார்க்கும் அதேவேளை, வறியவர்கள், தூர இடங்களில் இருந்து வருவோர் போன்றவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சையளித்து வருகிறாராம் மருத்துவர் அருளானந்தம்.

‘இவர் ஒரு மனிதக் கடவுள்’ என இவரிடம் சிகிற்சை பெற்ற ஏழைகள் புகழாரம் சூட்டுகின்றனர். இந்நிலையில் 81 ஆவது வயதிலும் இப்படி சேவை மனத்தோடு அயராது உழைக்கும் மருத்துவர் அருளானந்தம் ஐயாவின் சேவை இன்னும் பல்லாண்டுகாலம் நீடிக்க வேண்டுமென பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed