கடவுச் சீட்டுகளை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களது விண்ணப்பங்களில் நிரந்தர முகவரி அல்லது அவர்களது தற்காலிக முகவரியை குறிப்பிடுவதன் மூலம் அவர்களது கடவுச் சீட்டுகள் வீடிற்கே அனுப்பி வைக்கபடும்  என குடிவரவு மற்றும் தேசிய கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்கும்புர தெரிவித்தார்.

இதற்க்கான வசதிகள்அவரவர்களுக்கு உரிய பிரதேச செயலகங்களில் செய்து கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்