• Fr. Okt 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புதிதாக 12 நிலவுகள் கண்டுபிடிப்பு!

Feb 4, 2023

சூரிய குடும்பத்தின் மிகப்பெரும் கோளான வியாழனுக்கு அருகே மேலும் 12 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விண்வெளியில் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே பெரிய கோளாக வியாழன் உள்ளது. இதுவரை விஞ்ஞானிகளின் கணக்குப்படி சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை கொண்ட கோளாக சனிக்கோள் இருந்து வருகிறது. சனிக்கோளை 83 சந்திரன்கள் சுற்றி வருகின்றன.

இதுவரை வியாழன் கோளுக்கு 80 நிலவுகள் இருப்பதாகவே அறியப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மேலும் புதிதாக 12 நிலவுகள் வியாழனை சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதை சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு ஆராய்ந்து உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. அதனால் தற்போது அதிக நிலவுகளை கொண்ட கோளாக 92 நிலவுகளுடன் வியாழன் அதிக நிலவுகளை கொண்ட சூரிய குடும்பத்தின் முதல் கோள் என்ற பெயரை பெற்றுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed