திருகோணமலை-கன்னியா, சர்தாபுர வீதியால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைக்காக முச்சக்கர வண்டியில் மருந்து எடுக்க சென்று கொண்டிருந்த வேளை பசளை உரப்பையினுள் சுற்றி வீதி ஓரத்தில் சிசு ஒன்றை அவதானித்தவர்கள்.

வீதிக்கு அருகில் இருந்த குடும்பஸ்தவர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் குழந்தையினை கைப்பற்றியுள்ளனர்.பின்னர் குறித்த சம்பவம் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலிசார் குழந்தையை  திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது சிசு பற்றிய விபரங்கள் தெரியாமையால் பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்