யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த கைதி தப்பிச்சென்ற நிலையில் மகாவலி ஆற்றில் சடமாக மீட்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் கைதான குறித்த நபர் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற அவர் பல்லேகல இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் அவரது உடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.