• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகத்தையே உலுக்கிய நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்த ஆய்வாளர்

Feb 6, 2023

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன் அதைப்பற்றி கணிக்க இயலாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆனால் அது இன்னும் செல்லுபடியாகுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. துருக்கியில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் ( Frank Hoogerbeets) என்ற நெதர்லாந்து ஆராய்ச்சியாளர் தனது ட்விட்டர் கணக்கில் சில நாட்களுக்கு முன்பு பெப்ரவரி 3 ஆம் திகதி ஒரு கணிப்பு செய்தார்.

„விரைவில் அல்லது பின்னர் இந்த பகுதியில் (தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான்) 7.5 M நிலநடுக்கம் ஏற்படும்“ என்று அவர் தனது ட்விட்டர் கணக்கில் எழுதினார்.

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர் Frank Hoogerbeets வெளியிட்ட கணிப்பு துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 03 நாட்களுக்கு முன்னர் சரியாகப் பதிவு செய்ததன் காரணமாக சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டுள்ளது.

அதன்பிறகு, துருக்கி உள்ளிட்ட பிராந்தியத்தில் வலுவான நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிராங்க் ஹூகர்பீட்ஸ் மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed