பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிள்ளைகளான 3 சிறுமிகளும் 2 சிறுவர்களும் வீட்டின் இரண்டாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பிள்ளைகளில் நால்வர், அப்பெண்ணின் முதல் திருமணம் மூலம் பிறந்தவர்கள் எனவும் உயிரிழந்த சிறார்கள் 2 முதல் 14 வயதானவர்கள் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் பெண்ணின் கணவர் தீயினால் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் தரைத்தளத்தில் உள்ள சலவை இயந்திரம் பழுதடைந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.