கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (07-02-2023) பிற்பகல் 4.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

கிளிநொச்சியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன் பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 35 வயதுடைய கனகரத்தினம் ரீகன் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விதியில் நெல் உலர விடுவதனால் இந்த விபத்து இடம்பெற காரணமாக அமைந்ததாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்று நீண்ட நேரத்தின் பின்பே பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றதாகவும், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் உடலத்தை ஏற்றி செல்ல பொலிஸார் அனுமதித்த பின்பே விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.