இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று 5.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பப்புவா மாகாணத்தின் ஜெயபுர நகரில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணியளவில் 22 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் அளவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பூகம்பத்தையடுத்து மக்கள் அச்சமடைந்து, வீடுகள், வர்த்தக நிலையங்களிலிருந்து வெளியே ஓடினர்.

மேலும் வர்த்தக நிலையமொன்று சரிந்து வீழ்ந்ததால் நால்வர் உயிரிழந்தனர் என உள்ளூர் அனர்த்த தணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.