இலங்கையின்  வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதிகளில் சுமார் 3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ் நிலநடுக்கம் சிறிய அளவிலே ஏற்ப்பட்டுள்ளது எனவும் இதனால் எந்த வித பாதிப்பும் யாருக்கும் நிகழவில்லை எனவும் இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வானது  நாட்டிலுள்ள அனைத்து நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக இலங்கை புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவிப்பு விடுத்துள்ளது.