மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாழ்.புத்துார் கிழக்கு – ஊறணி பகுதியை சேர்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா (வயது4) என்ற சிறுமி கடந்த சிவராத்திரி தினத்தன்று திடீரென வாந்தி எடுத்து சுகயீனமடைந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி அச்சுவேலி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிறுமி சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.