யாழ். வடமராட்சி நெல்லியடி பகுதியில் புடவைக்கடை ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (27.02.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சேலைக்கடையில் திடீரென தீப்பிடித்ததில் பல இலட்சம் ரூபா பெறுமதியான சேலைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

தீயை அணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர நீண்ட நேரம் எடுத்ததால் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இது தொடர்பாக நெல்லியடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.