இந்தோனேசியாவில் இன்று(2) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்திற்கு அருகில் உள்ள ஜம்பி மாகாணத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.