• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோப்பாய் வீதி விபத்தில் காயமடைந்த இளைஞன் மரணம்

Mrz 2, 2023

யாழ். கோப்பாயில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கோப்பாய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில், முன்பாக சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டமையால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் காரின் பின் பகுதியில் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார்.

மயக்கம் அடைந்தவர் மீட்க்கபபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்றுமுன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் நீர்வேலி தெற்கை சேர்ந்த 23 வயதுடைய பவிதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய மகிழுந்து சாரதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed