வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் இலங்கை நாணயத்தை வெளிநாடுகளில் மாற்றுவதற்கு பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைவடைந்துள்ளமையாலே இந் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது விமான நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் இலங்கை பணம் பரிமாற்றப்படுகின்ற போதிலும், பண பரிமாற்று முகவர்கள் இலங்கை பணத்தை மாற்ற மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்தியா செல்லும் பயணிகளே இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றதுஆகையால் இந்தியா செல்லும் இலங்கையர்கள் சட்டவிரோத பண பரிமாற்று முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு உண்டியல் முறையிலும் சட்டவிரோதமாக பண [பரிமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்