அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலின் பெட்டி ஒன்று மோதியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.