வவுனியாவில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என நால்வருள்ள குடும்பமொன்றில் உறுப்பினர்கள் வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இளம் குடும்பமான தாய், தந்தை, இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மனைவி பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமை புரிபவராக அறிய முடிகிறது. இரண்டு பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது36, இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.