யாழ்ப்பாணம் நிலாவரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிலாவரை பகுதியிலிருந்து சிறுப்பிட்டி நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து இருந்தபோது எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதித் தள்ளியதில் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி போலிசார் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சுப்பையா இரத்தினசிங்கம் வயது 63 என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.