• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கடன் அட்டை பயன்பாடு குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!

Mrz 12, 2023

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 19,027,195 அட்டைகள் செயற்பாட்டில் இருந்ததாகவும், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 19,052,991 ஆக இருந்ததாகவும் மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அவற்றில், 13,445 உள்ளூர் கடன் அட்டைகளும் 19,040,720 உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் அட்டைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2021 ஆம் ஆண்டில் 133,285 கடன் அட்டைகள் நிலுவையில் உள்ளதாகவும் இது 2022 ஆம் ஆண்டில் 143,098 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed