வாஷிங்டன் பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளி வரவில்லை.

பப்புவா நியூ கினியா நாட்டின் கிழக்கு பகுதிதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மொரேஸ்பை துறைமுகத்திற்கு வடக்கு வடமேற்கே 448 கி.மீட்டர் தொலைவில் 200 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.