வடகொரியாவிடமிருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவை 33 நிமிடங்களில் அழித்து விட முடியுமென சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், சீனாவில் உள்ள ராணுவ பாதுகாப்பு விஞ்ஞானிகள் வடகொரியாவின் ராணுவ திறன்கள் குறித்து ஆபத்தான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
ஜப்பான் எல்லையில், அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை வடகொரியா சோதித்துப் பார்த்தது.
அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பு இதுபோன்ற ஏவுகணைகளை இடைமறிக்கத் தவறினால், 1,997 வினாடிகளில் அமெரிக்காவைத் தாக்க முடியும் என சீன பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.