• So. Okt 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை மத்திய வங்கியின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

Mrz 19, 2023

இலங்கையில் டொலர் பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி உயர்வை அடுத்தே ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலையில் தேவையான விடயங்களுக்கு போதுமான டொலர்கள் கையிருப்பில் இருப்பதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் (20-03-2023) இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், 2.9 பில்லியன் டொலர்களுக்கான ஒப்புதலை வழங்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமையன்று நாட்டுக்கு முதல் கட்டமாக 390 மில்லியன் டொலர்கள் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கள் எதிர்வரும் ஜூன் அளவில் நிறைவுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed