யாழ். காங்கேசன்துறை – தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) தகவல் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான பல திகதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அதிகாரிகளால் கையாளப்படும் இந்த படகுச் சேவைக்கு இலங்கை உதவிகளை மாத்திரமே மேற்கொள்ளும் என்று நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளேவரும் மற்றும் வெளியில் செல்லும் பயணிகளுக்கான களஞ்சிய வசதிகள் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் உட்பட சுங்க பிரிவு மற்றும் குடிவரவுப் பகுதிகளை நிர்மாணிப்பதற்காக இதுவரை 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.