• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலம்

Mrz 23, 2023

பெண்கள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத்தலம்  ஒன்று அனைவரது கவனத்தையும் திசை திருப்பியுள்ளது. யூரப்பிலுள்ள தீவொன்றில் காணப்படும் மலைக்கு மேல் கட்டப்பட்ட  மவுண்டா தோஸ்  என்ற கட்டத்திற்குள் பெண்கள் நுழைவதற்கே இவ்வாறு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இத்  தடையானது 1,000 வருடங்களிற்கு முன்னதாகவே விதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண்களிற்கான குறித்த  தடை இன்று வரை நடைமுறையில் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 

இவ் மவுண்ட தோஸிற்கு செல்வதாயின் படகின் உதவியுடன் மட்டுமே செல்ல முடியும். இந்த மவுண்ட தோஸ் கிறிஸ்தவ பாதிரிமார்கள் தமது கடவுளை வழிபாடு செய்யும் இடமாக காணப்படுகின்றது. 

இங்கு பெண்கள் வருவதற்கு மட்டுமன்றி வானொலி மற்றும் தொலைக்காட்சி  போன்றவற்றை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இங்கு வசிப்பவர்கள் மீன், இறைச்சி போன்ற மாமிச பொருட்களை உண்ணாதிருப்பதுடன் தானியங்கள், பழங்கள் ,மரக்கறி வகைகள் என்பவற்றையே உட்கொள்ளுகின்றனர். 

1953 ஆம் ஆண்டு கிரீக் பெண்மணியான மரியா பொய்மிடோ என்பவர் யாருக்கும் தெரியாத வகையில் ஆண்கள் போன்று ஆடைகள் அணிந்து அங்கு சென்றுள்ளார். அதற்கு பின்னர் இப்பொழுது வரை எந்த பெண்ணும் செல்லவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed