• Mo. Okt 7th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவில், மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு !

Mrz 23, 2023

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் இன்றைய தினம் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

வீட்டிலிருந்து மின்சாரத்தினை வெளியில் எடுத்து முற்றத்தில்  வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த  பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்

இலக்கம் 92 கொல்லவிளாங்குளம் ,வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுதாஜினி ( 38 ) வயது  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த  பெண்  திருமணமாகி 5 மாதங்கள் ஆன நிலையில் இந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றுள்ளது

சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed