• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டாரில் பரிதாபமாக பலியான இலங்கை பிரஜை

Mrz 24, 2023

கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்றுமுன்தினம் (22) கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக கட்டாரின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் குறித்த கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளார்.

உயிரிழந்தவர் இலங்கையர் எனவும், 56 வயதுடையவர் எனவும் அவரது மகனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 60 வயதுடைய நபர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கட்டாரில் பணிபுரியும் அவரது மகனால் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியன மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed