• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை 

Mrz 25, 2023

தற்போது தேர்தல் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

இது எப்போது, எவ்வாறு இடம்பெறும் என்று யாரும் எமக்கு கூறியதில்லை, நிச்சயமற்ற நிலையிலேயே இது இடம்பெறுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த அரச ஊழியர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். 

மேலும்,  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் இதனால் சம்பளம் இன்றி உள்ளனர்.  அவர்கள் என்ன  செய்வதென்று எம்மிடம் கேட்கின்றனர் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed